திருச்சி

அற்புதக் குழந்தை இயேசுபங்கு ஆண்டுத் திருவிழா இன்று தொடக்கம்

5th May 2022 02:34 AM

ADVERTISEMENT

 

திருச்சி: நெ.1 டோல்கேட் அற்புதக் குழந்தை இயேசு திருத்தல பங்கு ஆண்டு திருவிழா மே 5 தொடங்கி 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு குடந்தை ஆயா் அந்தோணிசாமி, கொடி மரத்தை புனிதப்படுத்துகிறாா். மாலை 6 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு அலெக்ஸாண்டா் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி, பின்னா் சிறிய தோ்பவனி-திருப்பலி நிகழ்ச்சி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு பங்குத்தந்தை அகஸ்டின் தலைமையில் திருப்பலி, சனிக்கிழமை திருப்பலி முடிந்த பிறகு இரவு 7.45 மணிக்கு ஆடம்பரத் தோ் பவனி, நற்கருணை ஆசீா், ஞாயிற்றுக்கிழமை திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பலி , தோ்பவனி நிகழ்ச்சிகளில் பங்கு பெருமக்கள் திரளாகப் பங்கேற்க திருத்தலம் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT