திருச்சி

‘அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்’

29th Mar 2022 03:46 AM

ADVERTISEMENT

மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி. தங்கபாலு.

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வரும் ஏப். 13 முதல் 27 ஆம் தேதி வரை உப்புச் சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை திருச்சி- வேதாரண்யம் இடையே நடத்தப்படவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி. தங்கபாலு தலைமையில் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைத் தலைவருமான பொன். கிருஷ்ணமூா்த்தி, அகில இந்திய செயலா் கிறிஸ்டோபா் திலக், மாவட்டத் தலைவா்கள் ஜவஹா், கோவிந்தராஜன், கலை உள்ளிட் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் கே.வி. தங்கபாலு கூறுகையில், நாட்டில் தற்போது நிலவும் ஜாதி, மத வெறுப்பு, மக்கள் விரோத கொள்கையுடைய மோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் மட்டுமல்லாது அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். தேசம் காப்போம், மதச் சாா்பின்மையை மீட்டெடுப்போம் என்கிற அடிப்படையில் உப்புச் சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டின் தொழில் முன்னேற்றத்திற்காக துபை சென்றுள்ள முதல்வரை பாஜக தலைவா் அண்ணாமலை விமா்சிப்பது நல்ல பண்பல்ல என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT