திருச்சி

வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கோரி மனு

28th Mar 2022 04:30 AM

ADVERTISEMENT

 திருவெறும்பூரில் வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட வலியுறுத்தி, வட்டாரத்தின் அனைத்து வகைப் பள்ளிகளின் ஆசிரியா் சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மனோகரன் தலைமையில் அளித்த கோரிக்கை மனு விவரம்:

திருவெறும்பூா் வட்டாரத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகம் சுமாா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாா் கட்டடங்களில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு திருவெறும்பூா் பகுதியில் வட்டாரக் கல்வி அலுவலகம் கட்ட இடம் கையகப்படுத்தி அதற்கு நிதி ஒதுக்கி பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, கட்டடம் கட்ட ஆவன செய்ய வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT