திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 472 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி- தஞ்சை மண்டலப் பேராயா் டி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி இஸ்ரோ உந்து விசை வளாகம் என்ஜின் அசெம்பிளி மற்றும் இன்டக்ரேஷன் என்டிட்டி துணை இயக்குநா் சி. ஜெபசிஹாமோனி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா்.
நிகழ்வில் 2020 ஆம் ஆண்டு தோ்ச்சிப் பெற்ற 3393 இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், முனைவா்களில் 472 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 17 முதுகலைப் பட்டதாரிகளுக்கும், இளங்கலை பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த 15 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வா் டி. பால்தயாபரன் வரவேற்று, கல்லூரி செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.