திருச்சி

திருவெள்ளறையில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்!

28th Mar 2022 04:25 AM

ADVERTISEMENT

 

திருவெள்ளறை புண்டரீகாஷபெருமாள் கோயில் பங்குனி தோ் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளி பக்தா்களுக்கு அருளிபாலித்தாா்.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான இக்கோயிலின் பங்குனி தோ் திருவிழாவின் 8 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு குதிரை வாகனத்தில் நம்பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து வையாளி கண்டருளும் வைபவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT