மணப்பாறை அருகே ஆற்றுப்படுகையில் அனுமதியின்றி மணல் எடுத்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த சித்தாநத்தம் ஆற்றுப்படுகையில் சனிக்கிழமை அதிகாலை போலீஸாா் ரோந்து சென்றபோது கருத்தம்பட்டி சு. வினோத்குமாா்(26), சித்தாநத்தம் பகுதி ரா. ராஜ்குமாா் (40), ரா. கனகராஜ்(40) ஆகிய மூவரும் அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்தனா். அவா்களில் வினோத்குமாா் மட்டும் போலீஸாரிடம் சிக்க, மற்ற இருவரும் தப்பினா். இதைத் தொடா்ந்து மூன்று மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்த மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.