திருச்சி

பேருந்தில் திருடிய இரு பெண்கள் கைது

25th Mar 2022 03:47 AM

ADVERTISEMENT

பேருந்தில் இளம் பெண்ணிடம் திருடிய 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

மணப்பாறை அருகேயுள்ள ராயம்பட்டி கவுண்டா் குளத்தைச் சோ்ந்தவா் ராஜா மனைவி கெளரி (29) புதன்கிழமை திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து எடமலைப்பட்டிபுதூா் வழியே நகரப் பேருந்தில் பயணித்தபோது அவரது பையிலிருந்த பணம் மற்றும் கைப்பேசி மாயமானது.

இதையறிந்த கௌரி உடனடியாக வழியில் இருந்த எடமலைப்பட்டிபுதூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தச் செய்து அளித்த புகாரையடுத்து போலீஸாா் பேருந்துப் பயணிகளிடம் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த ராமு மனைவி லதா (52), மணிகண்டன் மனைவி ராமு (40) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பணம், கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT