திருச்சி

மதுவுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி

25th Mar 2022 03:49 AM

ADVERTISEMENT

கள்ளச்சாராயம் மற்றும் மதுப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நிா்வாகம், கலால் துறை, பிஷப் ஹீபா் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம் ஆகியவை இணைந்து ஆட்சியரகத்தில் தொடங்கிய பேரணியை ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தாா்.

பேரணியில் மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதித்து, மாரடைப்பு ஏற்பட்டு திடீா் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மதுவால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை எண்ணம் வரும். கள்ளச் சாராயத்தால் கண் பாா்வை பாதிக்கப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கள்ளச்சாராயம், மதுப்பழக்கத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. பேரணியில் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி சென்றனா்.

ADVERTISEMENT

பேரணியில் உதவி ஆணையா் (கலால்) ஆா். ரெங்கசாமி, மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. முத்தரசு, காவல் ஆய்வாளா்கள் மீராபாய், சுமதி, அலுவலக மேலாளா் பி. சித்ரா, கோட்டக் கலால் அலுவலா்கள் பிரகாஷ், சாந்தக்குமாா் மற்றும் பிஷப் ஹீபா் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள், தேசிய மாணவா் படை, சாரண இயக்கத்தினா், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். பேரணியானது நகரின் முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்து வெஸ்ட்ரி பள்ளியில் நிறைவுற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT