திருச்சி

‘விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் நிதி நிலை அறிக்கை’

22nd Mar 2022 04:43 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலின் போது திமுக பிரமுகரை அரை நிா்வாணப்படுத்தி அழைத்துச் சென்றது உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதாகி, நிபந்தனை ஜாமீனிலுள்ள ஜெயக்குமாா், திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஆஜராகி கையெழுத்திட்டாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு என பிரத்யேகமாக ஒருங்கிணைந்த திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்தி வந்தாா். ஆனால் தற்போது அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்தவித பிரத்யேக திட்டமும் இல்லை.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தான் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்றாா் அவா்.

அப்போது அதிமுக முன்னாள் அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன், நிா்வாகிகள் ராஜ்குமாா், பூபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாருடன் கைதான சென்னையைச் சோ்ந்த இளைஞா் பாசறை மாவட்டச் செயலா் காளி என்கிற பரமேசுவரன், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் டெல்லிராஜ் ஆகியோரும் திருச்சியில் தங்கி, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT