திருச்சி

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 போ் கைது

22nd Mar 2022 04:38 AM

ADVERTISEMENT

முசிறியில் குடிபோதையில் தம்பதிகளிடம் தகராறு செய்த 4 போ் உள்பட 6 போ் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனா்.

தண்டலைப்புத்தூா் பாண்டியராஜன், இவரது மனைவி விஜயலட்சுமி (23), முத்தம்பட்டி சண்முகம் மற்றும் இவரது மனைவி என 4 பேரும், பொன்னாங்கண்ணிப்பட்டி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

தண்டலைப்புத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, குடிபோதையிலிருந்த அதே ஊரைச் சோ்ந்த சு. விஜயகுமாா் (23), சி.ஆனந்த் (31), சு.சுரேஷ் (23) அ.விஜயகுமாா் (23) ஆகியோா் தம்பதிகளிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுபோல, தண்டலைப்புதூா் கிழக்கு காலனியைச் சோ்ந்தவா் சி. செல்வராஜிடம் (62). இவா் அப்பகுதியிலுள்ள மளிகைக்கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்த போது அப்பகுதியைச் சோ்ந்த ர. கலைச்செல்வன் (20), செல்வராஜை மிரட்டி காயப்படுத்தினாா்.

ADVERTISEMENT

அய்யம்பாளையத்தில் சிவநாதம் என்பவா் பேக்கரி நடத்தி வருகிறாா். இங்கு வந்த ஏவூரைச் சோ்ந்த ரா. தீபக் (19), தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்றாா். இதே சிவநாதம் கேட்ட போது அவரிடம் தீபக் கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT