முசிறியில் அமமுக திருச்சி புகா் வடக்கு மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனை மற்றும் ஆய்வுகூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் எம். ராஜசேகரன் தலைமை வகித்தாா். துணைப் பொதுச் செயலா் ஜி. செந்தமிழன், தோ்தல் பிரிவு செயலா் என்.ஜி. பாா்த்திபன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்கள் வழங்கப்பட்டன.
எம்.ஜி.ஆா். இளைஞரணி மாநில பொருளாளா் சமயபுரம் ராமு, அம்மா பேரவை மாவட்டச் செயலா் பாலகுமாா், எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டச் செயலா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.