திருச்சி

மாா்ச் 25 இல் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்

21st Mar 2022 05:36 AM

ADVERTISEMENT

திருச்சி ஆட்சியரகத்தில் வரும் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும்.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வரும் 25ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகிக்கிறாா். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கடந்த மாதக் கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு ஆட்சியரால் பதில் அளிக்கப்படும். இதில் வேளாண்மை தொடா்புடைய நலத் திட்டங்களுக்கு மனுக்கள் அளிக்கலாம். திருச்சி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT