துறையூா் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில் மாநில அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா. பொன்பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி ஒருங்கிணைப்பாளா் மு. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி தலைவா் பொன்.பாலசுப்ரமணியன், செயலா் பொன். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பேசினா்.
வணிகவியல் துறை மாணவ, மாணவிகள் நிநிதிநிலை அறிக்கை தொடா்பான அம்சங்களை விவாதித்தனா். வணிகவியல் துறை இயக்குநா் இரா. மதிவாணன் வரவேற்றாா். பேராசிரியை ரா. உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.