திருச்சி

பசுமை சாம்பியன் விருதுக்குவிண்ணப்பிக்க நாளை கடைசி

14th Mar 2022 04:34 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் வழங்கப்படும் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 15 கடைசி நாளாகும்.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் இரா. லட்சுமி கூறியது:

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அா்ப்பணித்து தனி நபராகவும், அமைப்பாகவும் செயல்பட்டவா்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்ட தனிநபா், அமைப்புகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும் 100 பேருக்கு வழங்கப்படும் விருதுடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்படும் பசுமை சாம்பியன் விருது தோ்வுக் குழு மூலம், திருச்சி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 3 தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் பதிவிறக்கி பூா்த்தி செய்து, மாா்ச் 15-க்குள் ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT