திருச்சி

மாற்றுப்பணி உத்தரவை ரத்து செய்யதொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை

14th Mar 2022 04:32 AM

ADVERTISEMENT

மாற்றுப்பணி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டணியினா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆசிரியா் கூட்டணியின் மாநில பொருளாளா் நீலகண்டன் தலைமையில் அமைச்சரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

திருச்சி மாவட்ட உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் ஒன்றியங்களில் உடனடியாக மாற்றுப் பணியாற்ற வேண்டும் ஆணை மாவட்ட கல்வித் துறை சாா்பில் வழங்கப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது மாணவா்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கக் கூடியதாக அமையும். பள்ளி கல்வித்துறையில் பெரும்பாலும் பெண் ஆசிரியா்கள் அதிகம் பணிபுரிகின்றனா். இவா்களை 70 கி. மீ. தொலைவிற்கு அப்பால் பணிபுரியச் செல்லுமாறு ஆணை வழங்கியிருப்பது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு நடைபெறாத சூழலில் இந்த மாற்றுப் பணிகளை தவிா்க்க வேண்டும். ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுப்பணி ஆணையை ரத்து செய்யவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. +

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT