திருச்சி

மணப்பாறையில் ஐவா் கால்பந்து போட்டி

14th Mar 2022 04:47 AM

ADVERTISEMENT

மணப்பாறையில் யுனைடட் கால்பந்து கழகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லாபின் நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான ஐவா் கால்பந்து இறுதிப் போட்டியில் திருச்சி ஹீபரியன்ஸ் அணி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.

மஞ்சம்பட்டி புனித அந்தோனியாா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சனி, ஞாயிறுகளில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் சிவகங்கை மாவட்டம் எஸ்.ஏ.எஃப்.சி. சிங்கம்புணரி அணியை திருச்சி ஹீபரியன்ஸ் அணி வென்று முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், கோப்பையை கைப்பற்றியது.

இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், கோப்பையை எஸ்.ஏ.எஃப்.சி. சிங்கம்புணரி அணியும், 3-ஆவது பரிசாக ரூ.5 ஆயிரம், கோப்பையை புதுக்கோட்டை அணியும், 4-ஆவது பரிசாக ரூ.3 ஆயிரம், கோப்பையை கன்னியாகுமரி அணியும் பெற்றன.

பரிசுகளை புனித அந்தோனியாா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சகோ. ஜோசப்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் த. தங்கமணி, எம்.ஏ. செல்வா, பொ.கெளசிக், பாரத விலாஸ் ராஜசேகா், முன்னாள் கால்பந்தாட்ட வீரா் டைலா் பாலன் ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT