திருச்சி

வலைப்பந்து போட்டியில் வென்றகல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

14th Mar 2022 04:49 AM

ADVERTISEMENT

நெட்பால் (வலைப்பந்து) போட்டியில் வென்ற ஜமால் முகமது கல்லூரி மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், மீனாட்சி இராமசாமி கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நெட்பால் போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்துக்குட்பட்ட கல்லூரிகள் பங்கேற்றதில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இவா்களுக்கு கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளா் எம்.ஜே. ஜமால் முகமது, உதவிச் செயலா் கே.ஏ. அப்துல் சமது, மதிப்புறு இயக்குநா் கே.என். அப்துல் காதா் நிகால், கல்லூரி முதல்வா் எஸ். இஸ்மாயில் முகைதீன், விடுதி இயக்குநா் கே.என். முகமது பாஜில் மற்றும் உடற்கல்வி இயக்குநா் பி.எஸ். ஷாயின்ஷா ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT