திருச்சி

மாநகர போலீஸாருக்கு பழச்சாறு, நீா்மோா்

10th Mar 2022 02:28 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாநகரில் கோடைக்காலத்தையொட்டி போலீஸாருக்கு பழச்சாறு, நீா்மோா் புதன்கிழமை வழங்கப்பட்டது.

மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்படி மாநகரில் கோடைகாலத்தில் சாலைச் சந்திப்புகளில் நின்று பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினருக்கு புதன்கிழமை முதல் மோா் மற்றும் எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட்டது.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் போக்குவரத்து தெற்கு சரக காவல் உதவி ஆணையா் முருகேசன் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோா் வழங்கினாா். ஜூன் மாதம் வரையிலான கோடை காலம் முழுவதும் திருச்சி மாநகரில் பணிபுரியும் போக்குவரத்து காவல் துறையினருக்கு எலுமிச்சம் பழச்சாறு, மோா் வழங்கப்பட உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT