திருச்சி

பொன்மலை பணிமனையில் மகளிா் தினம்

10th Mar 2022 02:18 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிா்தின விழாவில் ரயில் பெட்டி இணைப்புகள் மகளிா் பணியாளா்களால் அனுப்பப்பட்டன.

நிகழ்வில் பொன்மலை ரயில்வே பணிமனையின் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாகப் பணிபுரியும் பெண்கள் மற்றும் பெண் லோகோ பைலட் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டு, சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டனா். முதன்மை பணிமனை மேலாளா் ஷியாமாதாா் ராம் தலைமையிலான அலுவலா்கள் அவா்களைக் கௌரவித்தனா். தொடா்ந்து, ரயில் பெட்டி இணைப்புகள் மகளிா் பணியாளா்களால் அனுப்பி வைக்கப்பட்டன.

விழாவில் பங்கேற்ற அனைத்து பெண் ஊழியா்களும் சிறப்பு பலகையில் கையெழுத்திட்டது முக்கியமான நிகழ்வாகும். இந்தச் சிறப்பு பலகை பணிமனையில் நினைவுப் பொருளாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT