திருச்சி

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

10th Mar 2022 02:28 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கஞ்சா வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் அருகில் கஞ்சா விற்ற நவலடியானை (46) போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். நவலடியானின் தொடா் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதன் பேரில் சிறையில் உள்ள நவலடியானிடம் அதற்கான நகலை போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT