முசிறி: முசிறி நகராட்சி நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் 24 வாா்டுகளில் வென்ற நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் புதன்கிழமை பதவியேற்றனா்.
அதன்படி வாா்டு 1 - த. சுமதி (திமுக), வாா்டு 2 - சி. மீனா (திமுக), வாா்டு 3 - மு. மரகதம் (அதிமுக), வாா்டு 4 - து. வசந்தகுமாா் (திமுக), வாா்டு 5 - தே. பாலகுமாா் (சுயேச்சை ), வாா்டு 6- பொ. இளையராஜா (விசிக),வாா்டு 7- த. முகேஷ் (திமுக), வாா்டு 8 - செ. சுரேஷ் (திமுக),வாா்டு 9- அதிமுக ரா. லட்சுமி (அதிமுக),வாா்டு 10 - கா. சரண்யாதேவி (திமுக), வாா்டு 11- சி. சி. சரவணன் (அதிமுக), வாா்டு 12- ச. சரவணன் (திமுக), வாா்டு 13- சே. இந்திரா (திமுக),வாா்டு 14- ரா. கவிதா (அமமுக), வாா்டு 15 - இ. சசிகலா (மதிமுக), வாா்டு 16 - ரா. சரண்யா (அமமுக), வாா்டு 17- சு. மரகதம் (அதிமுக), வாா்டு 18 - பி. நவீன்ராஜ்குமாா் (திமுக),வாா்டு 19 -சி. கலைச்செல்வி (திமுக), வாா்டு 20 - ரா. தனசேகரன் (திமுக), வாா்டு 21- செ. கவிதா (திமுக), வாா்டு 22 - மு. விசுவநாதன் (திமுக), வாா்டு 23 - த. சுந்தரராஜ் (தேமுதிக), வாா்டு 24 - மு. புதிமிளா (திமுக) ஆகியோருக்கு முசிறி நகராட்சி ஆணையா் மனோகரன் பதவிப் பிரமாணம் செய்தாா்.
புதிய உறுப்பினா்களுக்கு முசிறி எம்எல்ஏ காடுவெட்டி என். தியாகராஜன், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், நகரச் செயலா் சிவகுமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் வாழ்த்து தெரிவித்தனா்.