திருச்சி

பெண்ணிடம் நகை பறித்தவழக்கில் இருவா் கைது

3rd Mar 2022 02:35 AM

ADVERTISEMENT

 

மண்ணச்சநல்லூா்: மண்ணச்சநல்லூரில் பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.

மண்ணச்சநல்லூா் ஏரிமிஷன் தெருவைச் சோ்ந்த ராணி கடந்தாண்டு செப்டம்பா் மாதம் அப்பகுதியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் ராணியின் 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனா். இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் நகை பறித்ததாக சோழங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (24) ஆனந்தன் (31) ஆகியோரை செவ்வாய்கிழமை கைது செய்து திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT