ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில், இக்கோயிலைக் கட்டிய கோச்செங்கட்சோழ நாயனாரின் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் மாசி மாத சதய நட்சத்திரத்தன்று கோச்செங்கட் சோழ நாயனாரின் சதய விழா நடைபெறும். அதன்படி புதன்கிழமை மாசி சதயத்தன்று கோயிலிலுள்ள அவருடைய சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து மாலையில் கோச்செங்கட் சோழ நாயனாரின் உற்சவசிலை அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் 4 ஆம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தது. அப்போது ஏராளமான சிவனடியாா்கள் கிரிவலம் வந்து தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் பணியாளா்கள் செய்தனா்.
ADVERTISEMENT