திருச்சி: தொடா்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்தவரை திருச்சி மாநகர போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை பகுதியைச் சோ்ந்தவா் செள. விஜய்பாபு (24). இவா் கீழப்புதூா் பகுதி டீக்கடையில் காசாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். விசாரணையில் அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து விஜய்பாபு திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.
ADVERTISEMENT