திருச்சி

காவல்துறை சாா்பில் கழிவு வாகனங்கள் ஏலம்

3rd Mar 2022 02:35 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்டக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்டவாகனங்கள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.

மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்களின் ஏலம் வரும் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

ஏலம் எடுக்க விரும்புவோா் மாா்ச் 8 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களைப் பாா்வையிடலாம்.

ADVERTISEMENT

ஏலம் நடைபெறும் நாளில் காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதாா் அட்டையுடன் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ. 5000 முன் பணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழுத் தொகை, மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (இருசக்கர வாகனத்திற்கு 12%, நான்கு சக்கர வாகனத்திற்கு 18%) செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் பங்கேற்போா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இத்தகவலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT