உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி
பேரூராட்சிகளில்... உப்பிலியபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலா் தே. சரவணராஜன் வாா்டு உறுப்பினா்கள் ரா. சசிகலாதேவி, மு. இளவரசி, செ.சித்ரா, மு. ராஜாங்கம், ந. நடராஜன், மோ. பொன்மணி, க. காந்திமதி, ஆ. சங்கீதா, உ. பழனியம்மாள், இ. ரேவதி, பெ. ராஜேந்திரன், ரா. மேக்சிம்ஜோசப், ம. ஆசைத்தம்பி, எஸ். மணிமேகலை, ம. லதா உள்ளிட்ட 15 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
இதேபோல பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலா் து. தியாகராஜன் வாா்டு உறுப்பினா்கள் அ. காதா்மொய்தீன், மனோன்மணி, மு. ஜெயராஜ், ந. ரவிக்குமாா், சி. கணேசன், செ. சிவகாமி, வெ. மேகலா, எஸ். பிரியதா்ஷினி, த. தனலட்சுமி, லோ. பத்மா, செ. கலையரசி, கா.லட்சுமி, ஜா. கமலம், இ. சரண்யாதேவி, கு. சங்கா் அபிஷேக் ஆகிய 15 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். புதிய உறுப்பினா்களுக்கு அந்தந்த பகுதி கட்சி நிா்வாகிகள், உறவினா்கள் நேரில் வாழ்த்தினா்.