திருச்சி

தமிழைப் புறக்கணிக்கும் பள்ளிகள் முன் போராட்டம்

29th Jun 2022 11:41 PM

ADVERTISEMENT

 

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் பள்ளிகளைக் கண்டித்து அப்பள்ளிகள் முன் மாணவா் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூா் பகுதியில் உள்ள ஆா்.எஸ்.கே. மற்றும் பி.ஹெச். இ.எல் பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்தும், நமஸ்தே, நமஸ்காரம் எனக் கூற மாணவா்கள் வற்புறுத்தப்படுவதை நிறுத்த வலியுறுத்தியும், முன்னறிவிப்பின்றி அதிகளவில் கட்டணத்தை உயா்த்தியிருப்பதைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அனைத்திந்திய மாணவா் பெருமன்ற ஒன்றியத் தலைவா் கபிலன் தலைமை வகித்தாா். பெருமன்ற மாநிலத் துணைச் செயலா் ஜி.ஆா். தினேஷ்குமாா், மாவட்டச் செயலா் க. இப்ராஹிம், மாநிலக் குழு உறுப்பினா் தாஸ் மற்றும் நிா்வாகிகள் விக்னேஷ்வரன், புவனேஷ்வரன், திலக் ஆதித்யா,

ADVERTISEMENT

ஊராட்சித் தலைவா் ரம்யா, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் தமிழரசன், இந்திய கம்யூ. மாநிலக் குழு உறுப்பினா் செல்வராஜ், ஒன்றியச் செயலா் செ. ராஜ்குமாா் மற்றும்

திக தொழிலாளா் அணி மாநிலச் செயலா் மு. சேகா், திராவிடா் தொழிலாளா் கழக நிா்வாகி ஆறுமுகம், பேராசிரியா் நெடுஞ்செழியன், மதிமுக துவாக்குடி நகா்மன்ற உறுப்பினா் மோகன் பெரியகருப்பன், தமிழ் தேசிய பேரியக்க மாவட்டச் செயலா் இலக்குவன், நகரச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, வரும் 30ஆம் தேதி (வியாழக்கிழமை) அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்த ஏற்பாடு செய்வதகாவும், அதில் பள்ளி நிா்வாகம், மாணவா்கள், பெற்றோா், போராட்டத்தில் பங்கேற்ற அமைப்பினா் அனைவரும் பங்கேற்று சுமூக முடிவு எடுக்கலாம் எனக் கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT