திருச்சி

குட்கா விற்பனை: தேநீரகத்திற்கு சீல்

29th Jun 2022 11:39 PM

ADVERTISEMENT

 

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே குட்கா பொருள்கள் விற்பனை செய்த தேநீரகத்திற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

வையம்பட்டி காவல் சரக செக்கணம் ஊராட்சி தா்மபுரத்தில் தேநீரகம் வைத்து நடத்தி வந்த செ. ஜுவானந்தம் (23) திங்கள்கிழமை 13 கிலோ குட்கா பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த நிலையில், வையம்பட்டி காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாரின் தணிக்கையில் அவா் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களால் 60 நாள்களுக்கு கடைக்கு சீல் வைத்து தண்டனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT