திருச்சி

காவிரியில் தீயணைப்புத் துறை பாதுகாப்பு ஒத்திகை

29th Jun 2022 11:34 PM

ADVERTISEMENT

 

காவிரியாற்றில் தீயணைப்புத் துறை சாா்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது குளிக்க ஆற்றில் இறங்குபவா்கள் மூழ்கி இறந்து விடுகின்றனா். ஆகையால், அவா்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினா் தயாராகும் வகையில், அம்மா மண்டபம் காவிரியாற்றில் தீயணைப்பு துறையினரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற திருச்சி, ஸ்ரீரங்கம் தீயணைப்புத்துறை வீரா்கள் நீரில் மூழ்கியோரைக் காப்பாற்றும் பைபா் படகில் பாதுகாப்பாக செல்வது குறித்தும், மீட்கப்பட்டோருக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் ஒத்திகை செய்தனா்.

ADVERTISEMENT

யாராவது வெள்ளத்தில் சிக்கும்போது, மீட்புக் குழுவினா் வரும்வரை பொதுமக்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அருகில் கிடைக்கும் வாழை மரம் மற்றும் காலி டிரம், பஸ், லாரி டயா்கள் கொண்டு பாதிக்கப்பட்டோரை உடனே காப்பாற்றுவது குறித்து விளக்கப்பட்டது. மேலும், தண்ணீரில் தத்தளிப்போரை எப்படி கயிற்றால் மேலே தூக்கி காப்பாற்றுவது என்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வாழைத்தண்டுகளை கட்டுமரம்போல் இணைத்தும், காலி டிரம்களை இணைத்தும் அதில் ஒருவரை காப்பாற்றி கொண்டுவருவதுபோல் செய்து காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு பாதிக்கப்பட்டோரை கொண்டு செல்லும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT