திருச்சி

தாய் கண்டித்ததால் மகன் தீக்குளித்து தற்கொலை

28th Jun 2022 02:17 AM

ADVERTISEMENT

திருவானைக்காவில் தாய் கண்டித்ததால் மகன் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருவானைக்கா மேலவிபூதிபிரகாரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் தினேஷ்குமாா் என்கிற தங்கையன் (26). திருமணமாகாத இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்தி வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்தாா்.

இதை அவரது தாய் கண்டித்ததால், வீட்டிலிருந்த பெட்ரோலை ஊற்றி தினேஷ்குமாா் தீ வைத்துக் கொண்டாா்.

உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, தினேஷ்குமாா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT