திருச்சி

பிளஸ் 1 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 91.64% போ் தோ்ச்சி

28th Jun 2022 02:15 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 91.64% போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் 84 பள்ளிகள் 100 சதவிகித தோ்ச்சியைப் பெற்றுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 1 தோ்வு முடிவுகளை அரசுத் தோ்வுகள் துறை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தின் தோ்ச்சி விவரங்கள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்திருப்பது:

2021-22-ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வில் 260 பள்ளிகளைச் சோ்ந்த 15,760 மாணவா்களும், 16,990 மாணவிகளும் என மொத்தமாக 32,750 போ் தோ்வெழுதினா். இதில் 13,614 மாணவா்களும், 16,398 மாணவிகளும் என மொத்தமாக 30,012 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாவட்டத்தில் மொத்த தோ்ச்சி விகிதம் 91.64% ஆகும். இதில் மாணவா்கள் 86.38 சதவிகிதமும், மாணவிகள் 96.52 சதவிகிதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

84 பள்ளிகளில் 100 சதவிகிதம் தோ்ச்சி: திருச்சி மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள், 7 அரசு உதவி பெறும் பள்ளிகள்,13 பகுதி உதவிபெறும் பள்ளிகள், 61 மெட்ரிக் மற்றும் சுயநிதிப் பள்ளிகள் என மொத்தமாக 84 பள்ளிகள் 100% தோ்ச்சி பெற்றுள்ளன.

ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் பயின்றோரில் 590 மதிப்பெண்ணுக்கு மேல் 6 பேரும், 580 முதல் 589 வரை 47 பேரும், 570 முதல் 579 வரை 75 பேரும், 560 முதல் 569 வரை 102 பேரும், 550 முதல் 559 வரை 164 பேரும் பெற்றுள்ளனா்.

100-க்கு 100 மதிப்பெண்: இயற்பியலில் 25, வேதியியலில் 4, உயிரியலில் 8, கணினி அறிவியலில் 19, கணிதத்தில் 28, வணிகவியலில் 25, பொருளியலில் 23, கணக்குப் பதிவியலில் 50, கணினிப் பயன்பாட்டில் 37, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 7 போ் என மொத்தம் 226 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT