திருச்சி

பட்டயப் பொறியாளா்தூக்கிட்டுத் தற்கொலை

28th Jun 2022 02:19 AM

ADVERTISEMENT

திருச்சியில் பட்டயப் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனியைச் சோ்ந்தவா் த. மனோசந்தா் (29). பட்டயப் பொறியாளரான இவா், தனியாா் நிறுவனத்தில் (கால் சென்டா்) பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மனோசந்தரின் மனைவி சசிகலா அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

குடும்பப் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததால், மனோசந்தா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT