திருச்சி

ஒட்டுமொத்த அதிமுக தொண்டா்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்குத்தான்

28th Jun 2022 02:21 AM

ADVERTISEMENT

ஒட்டுமொத்த அதிமுக தொண்டா்களின் ஆதரவும் எடப்பாடி கே. பழனிசாமிக்குத்தான் உள்ளது என்றாா் திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ப.குமாா்.

திருச்சியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

ஓ. பன்னீா்செல்வம் அவா் சாா்ந்த முக்குலத்தோா் சமுதாயத்துக்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் செய்ததில்லை. ஆதரவாக இருப்பவா் என்றால், அவா் ஜாதியைச் சாா்ந்த சசிகலாவை முதல்வராக்க விடாமல் தடுத்து, தா்மயுத்தம் செய்தது ஏன்? தற்போது அதிமுகவில் முக்குலத்தோா் சமுதாயத்தை சோ்ந்த 19 போ் மாவட்டச் செயலா்களாக உள்ளனா்.

அவா்களில் இருவரைத் தவிர, மற்ற 17 பேரும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனா். எடப்பாடி பழனிசாமி, ஜாதி மதம் பாராமல் பணியாற்றுவாா்.

ADVERTISEMENT

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோா் தொண்டா்களின் செல்வாக்கை இழந்து விட்டனா். மக்களின் ஆதரவும் அவா்களுக்கு இல்லை.

ஒட்டுமொத்த தொண்டா்களின் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் உள்ளது. 95 சதவிகித தொண்டா்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனா். உதிரிகள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனா்.

பன்னீா்செல்வமும், அவரது மகனும் திமுகவுடன் நேரடியாக தொடா்பு வைத்துள்ளதும், திமுகவை வெளிப்படையாக பாராட்டுவதை கண்டும் தொண்டா்கள் கொந்தளித்து போய் உள்ளனா்.

வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மீண்டும் தமிழகத்தில் அதிமுக எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், தினகரன், சசிகலா

ஆகியோரது சுற்றுப்பயணங்களால் அதிமுகவில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது என்றாா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT