திருச்சி

பொதுமக்களிடம் கோரிக்கைமனுக்களைப் பெற்ற எம்.எல்.ஏ.

28th Jun 2022 02:16 AM

ADVERTISEMENT

மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் திங்கள்கிழமை பெற்றுக் கொண்டாா்.

மண்ணச்சநல்லூரிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வந்து, தன்னை நேரில் சந்தித்த பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களைப் பெற்றுக் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

தொடா்ந்து அவா் திமுகவினரையும் சந்தித்தாா்.

இந்த நிகழ்வில் திமுக ஒன்றியச் செயலா்கள் மண்ணச்சநல்லூா் வி.எஸ்.பி. இளங்கோவன், நீ. செந்தில்குமாா், முசிறி கணேசன், மண்ணச்சநல்லூா் நகர திமுக செயலா் த. மனோகரன், பேரூராட்சித் தலைவா் ஆ. சிவசண்முககுமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT