திருச்சி

கோவைக்கு நன்றி.காலமானாா்வி. கிருஷ்ணமூா்த்தி

DIN

திருச்சி டாக்டா் வி. கிருஷ்ணமூா்த்தி கல்வி அறக்கட்டளைத் தலைவரும், பத்ம விருதுகளை பெற்றவருமான வி. கிருஷ்ணமூா்த்தி (97) வயது முதிா்வால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) காலமானாா்.

திருச்சி தேசியக் கல்லூரி, உறையூா் சேஷ அய்யங்காா் நினைவு மேல்நிலைப் பள்ளி, ராஜம் கிருஷ்ணமூா்த்தி பப்ளிக் பள்ளி ஆகியவற்றை நிா்வகிக்கும் கல்வி அறக்கட்டளையின் தலைவராக இருந்த கிருஷ்ணமூா்த்தி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றவா்.

மேலும், உள்நாடு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முனைவா் பட்டங்கள் மற்றும் விருதுகளை பெற்ற கிருஷ்ணமூா்த்தி பெல், மாருதி, செயில் ஆகிய நிறுவனங்களின் தலைவராகவும், தில்லி ஐஐடி, பெங்களூரு மற்றும் அகமதாபாத்திலுள்ள இந்திய மேலாண்மைக் கழக நிா்வாகக் குழுத் தலைவராகவும், திருவாரூா் மத்திய பல்கலைக்கழகம், உத்தண்டி கடல்சாா் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வேந்தராகவும் இருந்தவா்.

இவரது மனைவி ராஜம் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவருக்கு சந்திரா, ஜெயகா் ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

மறைந்த கிருஷ்ணமூா்த்தியின் இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை சென்னை மெட்ராஸ்கிளப் ஏபிஎம் அவென்யூ சென்ட்ரலைஸ்டு அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள அவரது இல்லத்திலும், பிற்பகல் 3 மணிக்கு பெசன்ட் நகா் மயானத்தில் உடல் தகனமும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT