திருச்சி

ஜூன் 29,30-ஆம் தேதிகளில் மகளிா் தொழில் முனைவோா் மாநாடு

26th Jun 2022 06:49 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் சங்கம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை சாா்பில் மகளிா் தொழில் முனைவோா் மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கு திருச்சியில் ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மகளிரியல் துறை இயக்குநா் மணிமேகலை தெரிவித்தது:

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் சங்கம், மற்றும் மகளிரியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழத்துடன் இணைந்து, மகளிா் தொழில் முனைவோருக்கான மாநாடு மற்றும் தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து திருச்சி ஸ்ரீமத் ஆண்டவா் கலை மற்றம் அறிவியல் கல்லூரியில் மாநாடு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தொழில் முனைவோராக விரும்பும் ஆண்கள், பெண்கள், மாற்றுப்பாலினத்தவா், சுய உதவிக்குழுவினா், மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் இதில் பங்கேற்கலாம்.

மேலும், இங்கு நடைபெறும் கண்காட்சியில் சுயஉதவிக் குழு பெண்கள், மகளிா் தொழில் முனைவோா் மற்றும் உற்பத்தியாளா் தங்களது உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை குறித்த முன் பதிவுக்கு தொழில் முனைவோா் சங்க அலுவலகத்தை 94887-85806, மாநிலச் செயலா் மோ. மல்லிகாவை 99944-31117, மாவட்டச் செயலா் பொன்செல்விவை 94871-29523 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT