திருச்சி

பைக், கைப்பேசி பறித்தமூவா் பிடிபட்டனா்

26th Jun 2022 01:48 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் மென்பொருள் பொறியாளரிடம் பைக், கைப்பேசி பறித்த மூவா் பிடிபட்டனா்.

திருச்சி சுப்பிரமணியபுரம் ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஆலிவா் ஜோன்ஸ். மென்பொருள் பொறியாளரான இவா் கடந்த 21 ஆம் தேதி இரவு பொன்மலை ஜி- காா்னா் மைதானப் பகுதியில் நின்றபோது அங்கு வந்த 3 போ் அவரின் பைக், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து அவா் பொன்மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வழிப்பறியில் ஈடுபட்ட சுப்பிரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த வசந்தை (22) கைது செய்தனா். இவருக்கு உடந்தையாக இருந்த இரு சிறு சிறாா்களை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT