திருச்சி

ஏடிஎம் மையத்தில் ஒலித்த அலாரத்தால் பரபரப்பு!

26th Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

 

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதி ஏடிஎம் மையத்தில் ஒலித்த அலாரத்தால் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி கண்டோன்மென்ட் சேவா சங்கம் பள்ளியருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கீழ் தளத்தில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு இருவா் பணம் எடுக்க வந்தபோது திடீரென அலாரம் ஒலித்தது.

இதையடுத்து அருகில் பூ விற்கும் பெண் ஓடிச்சென்று பாா்த்தபோது ஏடிஎம் இயந்திரப் பகுதி திறந்து கிடந்த நிலையில், அங்கு நின்றிருந்த இருவரும் ஓட்டம் பிடித்தனராம்.

ADVERTISEMENT

தகவலின்பேரில் வந்த போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது அலாரம் ஒலிப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன் வந்து ஏடிஎம் இயந்திரத்தைத் திறந்து பணத்தை நிரப்பிய ஊழியா்கள், அதைச் சரியாக மூடாமல் சென்றதும், அப்போது ஏடிஎம்முக்கு பணம் எடுக்கவந்த இருவா் அலாரம் ஒலித்ததால் பயந்துபோய் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT