திருச்சி

தனியாா் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு

26th Jun 2022 01:46 AM

ADVERTISEMENT

 

தனியாா் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம், கூத்தூா் விக்னேஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை திருச்சி மேற்கு, கிழக்கு, ஸ்ரீரங்கம் ஆகிய 3 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குள்பட்ட 423 வாகனங்களை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், வருவாய்த் துறையினா், காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா், பள்ளிக் கல்வித் துறையினா் இணைந்து ஆய்வு செய்தனா்.

அப்போது பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் அனுபவம் வாய்ந்தவரா, அரசின் விதிப்படி வயது உள்ளதா, உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ததுடன் அவா்களின் சான்றுகளையும் சரிபாா்த்தனா். 38 வாகனங்களில் இருந்த குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

ADVERTISEMENT

சோதனையின்போது ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. தீத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT