திருச்சி

அமைச்சா் அலுவலக முற்றுகை முயற்சி: பாஜகவினா் கைது

26th Jun 2022 01:47 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் அமைச்சா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினா் 357 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் பாஜக மாநில ஓபிசி பிரிவுச் செயலரும், திருச்சி சிவா எம்பியின் மகனுமான சூா்யாசிவா பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருப்பதாகவும், எனவே அவரது அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் செய்யப் போவதாகவும் பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

பாஜகவினா்- போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு: இந்நிலையில் பாஜக மாநகா் மாவட்டத் தலைவா் ராஜசேகரன் தலைமையில் மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், மண்டலப் பொறுப்பாளா் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் ஏராளமான பாஜகவினா் சத்திரம் பேருந்து நிலைய காமராஜா் சிலைப் பகுதியில் குவிந்து, அமைச்சா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாகச் செல்ல முயன்றனா்.

ADVERTISEMENT

அப்போது அவா்களைத் தடுத்த போலீஸாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 43 பெண்கள் உள்பட 357 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT