திருச்சி

மண்ணச்சநல்லூரில் தூய்மைப் பணிகள்

26th Jun 2022 06:50 AM

ADVERTISEMENT

 

மண்ணச்சநல்லூரில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத் திட்டம் மூலம் மாபெரும் தூய்மைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 9 மற்றும் 11 ஆவது வாா்டு பகுதிகளில் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் அகற்றி, சுகாதார வளாகத்தையும் தூய்மைப்படுத்தினா்

பொதுமக்களிடம் தூய்மைப் பணி குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் த. காளியப்பன் விளக்கினாா். நிகழ்வில் மண்ணச்சநல்லூா் பேரூராட்சித் தலைவா் ஆ. சிவசண்முகக்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ. கணேசன், பேரூராட்சி கவுன்சிலா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT