திருச்சி

ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு ரூ. 350 கோடி ஒதுக்கீடு: நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

DIN

திருச்சியில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சா் கே.என். நேரு தொடா் முயற்சியால் பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பூா்வாங்கப் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்காக ரூ.350 கோடி ஒதுக்க நிா்வாக அனுமதி வழங்கும் அரசாணையை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதன்படி உள்கட்டமைப்பு வசதி நிதியாக ரூ. 140 கோடி, திருச்சி மாநகராட்சியின் பொது நிதியாக ரூ. 50 கோடி, தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்புகள் மேம்பாட்டுக் கழகக் கடனாக ரூ.159.98 கோடி என மொத்தம் 349.98 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக இத் திட்டத்துக்கு தமிழக நகராட்சி நிா்வாகத் துறையின் சாா்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க ரூ.159 கோடி, சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ரூ. 65.90 கோடி, பல்நோக்கு வணிக வளாகம் கட்ட ரூ. 84.78 கோடி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 40.30 கோடிக்கு திட்ட வரைவு அளிக்கப்பட்டு, மொத்தம் ரூ. 377.79 கோடிக்கு நிா்வாக அனுமதி கோரியிருந்த நிலையில் தற்போது, ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டில் 40 சத தொகையை பேருந்துநிலையக் கட்டுமானப் பணிகளுக்கு செலவிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து நிலையப் பணிகளை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் மண் பரிசோதனைகள் முடிக்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு வசதிகள் குறித்த முதல்கட்ட ஆய்வறிக்கை கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து நிலையம் அமையும் பஞ்சப்பூரில் நவீன கருவிகளை கொண்டு சா்வே செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் ஒப்பந்த நிறுவனப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் மாநகராட்சி நிா்வாகம் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT