திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

25th Jun 2022 04:28 PM

ADVERTISEMENT

திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது. 

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 36 நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை இலங்கை தமிழர்கள் நான்கு பேர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்‌‌.

இதையும் படிக்க- சென்னை பகுதியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா தீவைத்து அழிப்பு

விசா முடிந்து தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உமா ரமணன் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துக் கொண்டார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக தீக்காயமடைந்த இலங்கைத் தமிழர் உமா ரமணனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் தூக்கமாத்திரை உட்கொண்டனர். அவர்களும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில்  இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் இலங்கை தமிழர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT