திருச்சி

வையம்பட்டியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் மூவா் கைது

24th Jun 2022 03:20 AM

ADVERTISEMENT

 

வையம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன் வீடு புகுந்து திருடிய 3 பேரை வையம்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் கடந்த ஜூன் 7 நள்ளிரவு பூ வியாபாரியான அண்ணாநகா் ச.பிலோமினால் மேரி ( 65) என்பவரது வீட்டின் ஓட்டை பிரித்து புகுந்த திருடா்கள் 13.5 பவுன் நகை மற்றும் ரூ.40,000 ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

அதேபோல், 12-ஆம் தேதி இரவு பூ வியாபாரியான கருங்குளம் பாலமேடு அ.பெமினா ராணி வீட்டில் புகுந்த திருடா்கள் நகை, வெள்ளிப்பொருள்களை திருடிச் சென்றனா்.

ADVERTISEMENT

இந்த சம்பவங்கள் குறித்தும் காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த திருவனந்தபுரம் மாவட்டம் நல்லிகால சுலையூா் சிந்தாபவன் பகுதி ராஜன் மகன் ராஜ்குமாா்(எ) உண்ணி (22), தூங்காம்பாறை கண்டலா பகுதி விபின்குமாா் மகன் ஆடா்ஸ் (எ) அச்சு(27) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூா் சவேரியாா்பாளையம் முகமதுகுட்டி மகன் இஸ்மாயில்(எ) ஆடு இஸ்மாயில் (38) ஆகிய மூவரையும் வியாழக்கிழமை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா். அவா்களிடமிருந்து 5 பவுன் நகை மீட்கப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரைத் தேடுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT