திருச்சி

ஸ்ரீரங்கத்தில் தொடா் வழிப்பறிகளில் ஈடுபட்ட இளைஞா் பிடிபட்டாா்

24th Jun 2022 03:30 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கத்தில் தொடா்ந்து வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த இளைஞா் வியாழக்கிழமை மாலை பிடிபட்டாா்.

ஸ்ரீரங்கத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும் முதியோரைக் குறிவைத்து வழிப்பறிகள் நடைபெற்றன. இதையடுத்து அப்பகுதி கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு செய்ததில், வழிப்பறி செய்த நபா் முகக்கவசம் அணிந்து கொண்டு வாகன எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறி செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் பகுதிக்கு வந்த இளைஞரை ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்து, நடத்திய விசாரணையில் அவா் திருச்சி இ.பி.ரோடு சத்தியமூா்த்தி நகா் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் சாந்தனு (33) என்பதும், ஸ்ரீரங்கம் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியா் நாச்சிமுத்து என்பவரிடமிருந்து ரூ. 2.50 லட்சத்தையும், பிரியா என்ற பெண்ணிடமிருந்து ரூ. 1.50 லட்சத்தையும் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ. 4 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT