திருச்சி மத்திய சிறையில் உண்ணாவிரதத்தில் இருந்த ஈழத்தமிழர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வந்த ஈழத் தமிழர்களில் ஒருவரான உமா ரமணன், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி இன்று தீ குளித்துள்ளார்.
இதையும் படிக்க- வரும் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்: வைகைச்செல்வன்
இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ADVERTISEMENT
மேலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரக்கூடிய 4 பேரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.