திருச்சி

சாலை விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு: திருச்சி நீதிமன்றம்

DIN

திருச்சி: திருச்சி அருகே சாலை விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டம், வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் (37). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 தேதி, அவரது  மனைவியின் சொந்த ஊரான திருச்சி மாவட்டம் குண்டூர், ராகவேந்திரா நகருக்கு வந்துவிட்டு திரும்பிய போது, திருச்சி - புதுக்கோட்டை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ்வழியே, அரசு பேருந்து   மோதியதில், தனசேகரன் பாண்டியன் படுகாயமடைந்தார். இதில் அவரது அறுவை சிகிச்சை மூலம் வலது அகற்றப்பட்டது.

இதனால் அவர் ராணுவ பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விபத்தில் காலை இழந்ததற்கு நஷ்ட ஈடு  கேட்டு  வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த திருச்சி, மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி  சோமசுந்தரம், பாதிக்கப்பட்ட ராணுவ  வீரருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.1 கோடி 67 லட்சத்து என்பத்து நான்காயிரத்து இருபது வழங்கவேண்டுமென வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் தரப்பில் தரப்பில் வழக்குரைஞர் முத்துமாரி ஆஜராகி வாதாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT