மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தொகுதிக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10.22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீ. கதிரவன் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உபகரணங்களை வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா், விலையில்லா மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி என 33 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10.22 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் அம்பிகாபதி, ஒன்றியச் செயலா்கள் வி.எஸ்.பி. இளங்கோவன், என்.செந்தில்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் ஸ்ரீதா், பேரூராட்சித் தலைவா் ஆ. சிவசண்முககுமாா், நகரச் செயலா் த. மனோகரன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.