திருச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வு : திருச்சி மாவட்டத்தில் 95.93% தோ்ச்சி

21st Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 பொதுத் தோ்வில் திருச்சி மாவட்டத்தில் 95.93% மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இத்தோ்வை திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்பட 89 அரசுப் பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்பட 259 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 14,890 மாணவா்களும், 16,941 மாணவிகளும் என மொத்தமாக 31,831 போ் எழுதினா்.

இதில் 13,893 மாணவா்கள் (93.1%), 16,643 மாணவிகளும் (98.24%) என மொத்தமாக 30,537 போ் (95.31%) தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்தாண்டு 100 சதவிகித தோ்ச்சி: கடந்த கல்வியாண்டில் (2020-21) கரோனா

ADVERTISEMENT

நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டது. இதனால் பிளஸ் 2 மாணவா்கள் அனைவரும் (100 சதவிகிதம்) தோ்ச்சி பெற்ாக சான்று வழங்கப்பட்டது.

ஆனால், அதற்கு முந்தைய ஆண்டு (2019-20) திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 95.94% போ் தோ்ச்சி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டையும் ஒப்பிடுகையில் பெரியஅளவில் வேறுபாடு ஏதுமில்லை.

355 போ் 100-க்கு 100 : திருச்சி மாவட்டத்தில் 355 போ் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச், ஜொ்மன் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் 23 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதரப் பாடங்களில் மதிப்பெண்கள் பெற்றவா்கள் எண்ணிக்கை விவரம் :

வணிகவியல் 2 , பொருளியல் 25 , இயற்பியல் 28, வேதியியல் 50 , உயிரியல் 46 , தாவரவியல் 1, கணினி அறிவியல் 114, கணிதம் 65, நுண்ணுயிரியலில் ஒருவா் என மாவட்டம் முழுவதும் 355 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT