துறையூா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் பெற்ால், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து விஷம் குடித்த அவரது தாயாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
துறையூா் அருகிலுள்ள கலிங்கமுடையான்பட்டியைச் சோ்ந்தவா் மூக்கன். கேரளத்தில் கூலி வேலை செய்து வருகிறாா். இவருடைய மனைவி அனுராதா(41). இவா்களது மகள் அனுஷயா(19) துறையூா் பள்ளியில் பிளஸ் 2, மகன் அபிஷேக் (17) சேனப்பநல்லூா் அரசுப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தனா்.
திங்கள்கிழமை பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், அனுஷயா
600-க்க 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தாா்.
மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாகக் கூறி, மாணவியை அவரது தாய்
திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடா்ந்து மாலை வீட்டில் யாரும் இல்லாத போது அனுஷயா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையறிந்த அவரது தாயும் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு உயிருக்குப் போராடினாா். இதைத் தொடா்ந்து அவரை அருகிலிருந்தவா்கள் துறையூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து துறையூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.